சுமார் 2,300 பேர் வசிக்கும் தெற்கு ஆஸ்திரேலியாவின் வடமேற்குப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக ஒட்டகங்களைக் கொல்லும் வேலை நடந்துவருகிறது. ஏபிஒய் லேண்ட்ஸ் என்ற நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரிலிருந்து ஊசியைச் செலுத்தி ஒட்டகங்கள் கொல்லப்படுகின்றன.
அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை ஒட்டகங்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கிறது. “வறட்சியால் வனவிலங்குகள் குறித்த பிரச்சினையும் தீவிரம் அடைந்துள்ளது” எனக் கூறுகிறது.
மேலும், சில இடங்களில் வறட்சியால் விலங்குகள் இறந்துபோகின்றன எனவும் இறந்த விலங்குகளின் உடல்கள் முக்கியமான நீர் ஆதாரங்களை அசுத்தமாக்கிவிடுகின்றன எனவும் சுற்றுச்சூழல் துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.
பயண வசதிக்காக சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்கள் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுள்ளன.