கார் நிறுவனங்களுக்கு இது கஷ்ட காலம்... அடி வாங்கிய மாருதி சுஸுகி!

இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி டிசம்பர் மாதத்தில் 1.9 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது


கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடுமையான சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. தேவை குறைவால் விற்பனை வீழ்ச்சி, வேலையிழப்புகள், உற்பத்தியைக் குறைக்க வேண்டிய கட்டாயம் என மீளாத் துயரில் ஆழ்ந்துள்ளன. குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கான இழப்புகள் ஏராளம். நவம்பர் மாதத்திலும் நிறுவனங்கள் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.


கார் சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,50,630 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 2018ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் விற்பனை செய்த 1,53,539 கார்களை விட 1.9 சதவீதம் குறைவாகும்


மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில், உள்நாட்டில் மட்டும் 1,43,686 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. 2018 நவம்பரில் இதன் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கை 1,46,018 ஆக இருந்தது. 1.6 சதவீத வீழ்ச்சி உள்நாட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ளது.